அடிச்சு துவம்சம் செய்த பஞ்சாப் வீரர்கள்; மிக மோசமான சாதனை படைத்த பெங்களூர் வீரர் ஹசில்வுட் !! 1

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை வாரி வழங்கியதன் மூலம் பெங்களூர் வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் மிக மோசமான சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அடிச்சு துவம்சம் செய்த பஞ்சாப் வீரர்கள்; மிக மோசமான சாதனை படைத்த பெங்களூர் வீரர் ஹசில்வுட் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 70 ரன்களும், பாரிஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடிச்சு துவம்சம் செய்த பஞ்சாப் வீரர்கள்; மிக மோசமான சாதனை படைத்த பெங்களூர் வீரர் ஹசில்வுட் !! 3

இதன்பின் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் (10) மற்றும் விராட் கோலி (20) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் (35) மற்றும் படித்தர் (26) ஓரளவிற்கு ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

அடிச்சு துவம்சம் செய்த பஞ்சாப் வீரர்கள்; மிக மோசமான சாதனை படைத்த பெங்களூர் வீரர் ஹசில்வுட் !! 4

இந்தநிலையில், இந்த போட்டியில் 64 ரன்களை வாரி வழங்கிய பெங்களூர் அணியின் ஹசில்வுட் இதன் மூலம், நடப்பு தொடரில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் மார்கோ ஜென்சன் 63 ரன்கள் விட்டுகொடுத்ததே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது, இதனை தற்போது ஹசில்வுட் முறியடித்து மோசமான சாதனையை வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.