பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 1

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

15வது ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 2

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 70 ரன்களும், பாரிஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணி சார்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 3

இதன்பின் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் (10) மற்றும் விராட் கோலி (20) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மேக்ஸ்வெல் (35) மற்றும் படித்தர் (26) ஓரளவிற்கு ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 4பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 5

இந்தநிலையில், பஞ்சாப் அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணியுடனான படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !! 6

இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “பஞ்சாப் அணி பேட்டிங்கில் அதிகமான ரன்கள் குவித்துவிட்டது. பஞ்சாப் அணியின் துவக்க வீரரான ஜானி பாரிஸ்டோவின் அதிரடி ஆட்டம், போட்டியின் துவக்கத்திலேயே எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 200 ரன்களுக்குள் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இது போன்றே பெரிய இலக்குகளை துரத்தி விளையாடும் பொழுது, விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க வேண்டும், ஆனால் இந்த போட்டியில் எங்களுக்கு அது தான் நடந்தது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டி என்பதால் கூடுதல் பொறுப்புடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம். வெறும் ஓரிரு நாளில் நாங்கள் திறமையான அணியாக உருவெடுத்துவிட முடியாது, ஆனால் அதிக நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.