பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஜடேஜாவுக்கு ஏ+ கிரேட் கொடுக்காதது ஏன் ? உண்மையை சொன்ன பிசிசிஐ அதிகாரி 1

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஆண்டுதோறும் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வரும். அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை பிசிசிஐ நடப்பு ஆண்டிற்கான (2020-2021) வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த ஒப்பந்தப் பட்டியலில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஜடேஜாவுக்கு ஏ+ கிரேட் கொடுக்காதது ஏன் ? உண்மையை சொன்ன பிசிசிஐ அதிகாரி 2

வீரர்களின் ஊதியத்தை வைத்து ஏ+, ஏ, பி, சி என நான்கு பிரிவுகளாக பட்டியலை தயாரித்து பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. இதில் ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 7 கோடியும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 5 கோடியும், பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு 3 கோடியும், சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1 கோடியும் வழங்கப்படும்.

இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் சுப்மான் கில் புதிதாக இடம்பெற்று இருக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா போன்று சில வீரர்களுக்கு பி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஜடேஜாவுக்கு ஏ+ கிரேட் கொடுக்காதது ஏன் ? உண்மையை சொன்ன பிசிசிஐ அதிகாரி 3

ஆனால் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா எந்தொரு மாற்றமும் இன்றி அதே ஏ பிரிவில் இருக்கிறார். ஆனால் தற்போது பிசிசிஐ தரப்பினர் ஒருவர் ரவிந்திர ஜடேஜாவை ஏ+ பிரிவுக்கு மாற்ற ஆலோசனை செய்தோம். ஆனால் ஒருசில காரணத்தினால் எந்த மாற்றயமும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஏ+ பிரிவில் தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். ஏ+ பிரிவு வீரர்களை ஐசிசி தரவரிசை மூலம் தேர்வு செய்திருக்கிறார்கள். ஜடேஜா ஆல்ரவுண்டர் தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கிறார். ஓடிஐ மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் டாப் 10ல் ஜடேஜா இருக்கிறார்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஜடேஜாவுக்கு ஏ+ கிரேட் கொடுக்காதது ஏன் ? உண்மையை சொன்ன பிசிசிஐ அதிகாரி 4

காயம் காரணமாக ஜடேஜா பல சரவதேச போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் பிரசாத் இதுகுறித்து கருத்து தெறிவித்து இருக்கிறார். கிரிக்பஸிற்கு பேட்டியளித்த பிரசாத் “ஜடேஜா உண்மையிலயே ஏ+ பிரிவுக்கு தகுதியானவர். மூன்று பார்மட்களிலும் விளையாடி, ஐசிசி தரவரிசையில் நல்ல இடத்தை பிடித்து வீரர்களுக்கு தான் ஏ+ பிரிவு. ரவிந்திர ஜடேஜாவை ஏ+ பிரிவில் எடுக்கப்படாததற்கு எந்த காரணமும் எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *