Cricket, India, BCCI, Virender Sehwag, Ravi Shastri, Rahul Dravid

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பதற்கு முன், அந்த பதவிக்கு வர விரேந்தர் சேவாகிற்கு தான் வாய்ப்பு இருந்தது.

அவருடைய பவர் பாய்ண்ட் ப்ரெசென்ட்டேஷன் சிறப்பாக இருந்ததாம், இதனால் அவர் அனைவரையும் கவர்ந்தார். நேர்காணலில் நேரடியாக கலந்து கொண்ட ஒரே விண்ணப்பதாரர் வீரேந்திர் சேவாக் தான். இதனால், இவருக்கு பலம் மேலும் அதிகரித்தது. ஆனால், அவருடைய ஒத்தாசைக்கு வேண்டிய ஊழியர் தான் அவருக்கு ஆபத்தாய் முடிந்தது.

கிடைத்த தகவலின் படி, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டெல்லி அணியின் மிதுன் மனாஸை விரேந்தர் சேவாக் கேட்டார். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போதைய பயிற்சியாளருடன் வேலை செய்ய ரவி சாஸ்திரி ஒப்பு கொண்டதால், அவரை தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

சேவாகின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால், ரவி சாஸ்திரியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனால், அவருடன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மற்றும் ஜாஹீர் கானை நியமித்தது பிசிசிஐ.

இந்நிலையில், இந்த பிரச்சனை இன்னும் முடியவில்லை. பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் தான் வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டு கொண்டார். ஆனால், இப்போது அவர் பொறுத்து கொண்டு, சிறிது நாள் கழித்து அவர் பேச வேண்டும்.

இலங்கை தொடருக்கு இந்திய அணியுடன் ரவி சாஸ்திரி செல்வார். அவருடன் ஜாஹீர் கான் செல்லுவாரா செல்ல மாட்டாரா என குழப்பம் எழுகிறது. ஜூனியர் இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் தென்னாபிரிக்கா செல்ல உள்ளதால், அவர் கண்டிப்பாக இந்திய அணியுடன் இலங்கை செல்ல மாட்டார்.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.