ஐபிஎல் தொடரின்  இறுதிப் போட்டியில்  மும்பை அணியும் , சென்னை அணியும் மோதியது.இறுதியாக மும்பை 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று சென்னை அணிக்கு  கடைசி ஒரு ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது சென்னை அணி ஒரு ஐந்து பந்திற்கு 7 ரன்கள் எடுத்தனர்.

பின்னர்  மீதம் உள்ள  ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் மலிங்கா பந்துவீச்சால் திறமையால் ஷர்டுல் தாகூர் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த பரபரப்பான போட்டியை  “Hot Star”-ல் தேடி பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 16.9 மில்லியன் ஆக இருந்தது.இப்போட்டியில் வெற்றி பெற்ற தன் மூலம் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி எப்படியும் கோப்பையை வெல்லும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த சென்னை ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றவர் வாட்சன். இவர் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். வாட்சன் அதிரடி ஆட்டம் கொடுத்த நம்பிக்கைதான் சென்னை ரசிகர்களை இறுதிவரை போட்டியைக் காண வைத்தது. ஏனென்றால், தோனி ரன் அவுட் ஆன உடனே போட்டி முடிந்துபோனதாக தான் எல்லோரும் நினைத்தார்கள்.

போட்டி முடிந்து ஹர்பஜன் சிங் வெளிப்படுத்திய பின்னர்தான் வாட்சன் ரத்தம் காயங்களுடன் விளையாடியது எல்லோருக்கும் தெரியவந்தது. போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. வாட்சனும் தன்னுடைய காயத்தினை பொருட்படுத்தாமல் 20 ஓவர்களும் களத்தில் நின்று போராடினார்.

ரத்த காயங்களுடன் வாட்சன் விளையாடிய படத்தை பார்த்ததும், சென்னை அணி ரசிகர்கள் பலரும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள். ‘வாட்சனின் இந்தப் போராட்டத்திற்காகவாவது சென்னை அணி வெற்றி பெற்றிருக்கலாம்’ என்று ரசிகர்கள் கூறினர்.

இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் வாட்சன் சரியாக விளையாடவில்லை. அவர் மீது நிறைய விமர்சனங்கள் வந்தது. அப்படி இருந்தும், வாட்சன் மீது நம்பிக்கை வைத்து தோனி தொடர்ந்து ஆட வைத்தார். ‘வாட்சன் வெற்றியின் நாயகன்’ என்றும் ஒருமுறை கூறியிருந்தார் தோனி.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தன்னுடைய அதிரடியாக வெற்றியை பரிசளித்தார் வாட்சன். தோனி, வாட்சன் மீது வைத்த நம்பிக்கையை குறிப்பிட்டு சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

#WatsontheLegend, #WattoMan, #WhistlePodu4Ever உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளில் சென்னை ரசிகர்கள் வாட்சனை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...