கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி துவங்கும் பிசிசிஐ., துணை தலைவரான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுதப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 29 போட்டிகளே நடத்தப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக ஐபிஎல் தொடர் நிறுதப்பட்டது.

இந்த தேதியில் துவங்குகிறது ஐபிஎல் தொடர்; முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ !! 2

இந்த வருட தொடருக்கான எஞ்சியுள்ள போட்டிகளை முழுமையாக நடத்தி முடிக்காவிட்டால், பிசிசிஐ.,க்கு கிட்டத்தட்ட 2500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதால் எஞ்சியுள்ள போட்டிகளை நிச்சயம் நடத்தியே தீர வேண்டுமென அறிவித்திருந்த பிசிசிஐ., அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தது.எஞ்சியுள்ள போட்டிகளை டி.20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் செப்டம்பர் மாதம் துபாய் அல்லது இங்கிலாந்தில் வைத்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என பேசப்பட்டது.

துபாயில் வைத்து ஐபிஎல் தொடரை நடத்துவதே சரியாக இருக்கும் என ஒரு சிலரும், இங்கிலாந்தில் வைத்து நடத்துவது தான் சரியாக இருக்கும் என ஒரு சிலரும் கூறிவந்ததால், சமூக வலைதளங்களில் ஒரு விவாதமே நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிசிசிஐ., இந்த விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த தேதியில் துவங்குகிறது ஐபிஎல் தொடர்; முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ !! 3

துபாயில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என அறிவித்திருந்தாலும், தொடர் துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ராஜீவ் சுக்லா அளித்தப் பேட்டியில் “ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெறும். மேலும் ஐபிஎல் போட்டியின் தேதிகளால் டி20 உலகக் கோப்பை பாதிக்கப்படாது. மேலும் வீரர்களுக்கு போதுமான நேரமும் கிடைக்கும். இதையெல்லாம் யோசித்தே அட்டவணையை தயார் செய்து இருக்கிறோம்” என்றார் அவர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *