கோஹ்லிக்கு ஓய்வு கிடைத்தது நல்ல விசயம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 1
கோஹ்லிக்கு ஓய்வு கிடைத்தது நல்ல விசயம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார்

கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்காமல் விராட் கோஹ்லி ஓய்வு எடுத்தது நல்லது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம்  செல்லும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணியுடன், 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி, ஜூலை 3ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது.

கோஹ்லிக்கு ஓய்வு கிடைத்தது நல்ல விசயம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 2

அதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக (ஜூன் 27, 29ம் தேதி) இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி கடையாக (2007, 2011, 2014) மூன்று முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பின் முதல் முறையாக முதலில் டெஸ்ட் போட்டிகளில் இல்லாமல் ஒரு நாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

கோஹ்லிக்கு ஓய்வு கிடைத்தது நல்ல விசயம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 3

தவிர, எப்போதும் அந்நிய மண்ணில் போட்டிகளுக்கு செல்லும் இந்திய அணி, பயிற்சி போட்டியில் பங்கேற்பது வழக்கம், ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக எவ்வித பயிற்சி போட்டியும் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதனால் இந்திய அணி அந்நிய மண்ணில் சாதிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய கேப்டன் கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாமல் ஓய்வு எடுத்தது நல்லது தான் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கோஹ்லிக்கு ஓய்வு கிடைத்தது நல்ல விசயம் தான்; ரவி சாஸ்திரி சொல்கிறார் !! 4

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியாவது, “கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாமல் கோஹ்லி ஓய்வில் இருந்தது என்னை பொறுத்தவரையில் நல்லது தான், இதனை தான் கோஹ்லியும் கூறினார். பயிற்சி என்பதை போன்றே ஒவ்வொரு வீரருக்கும் ஓய்வும் மிக அவசியமானது. இங்கிலாந்து அணியுடனான முந்தைய தொடர்களில் கோஹ்லி கடுமையாக சொதப்பியிருந்தாலும் இந்த தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சமீபகாலமாக அபாரமாக விளையாடி வரும் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம் இங்கிலாந்து தொடரிலும் நீடிக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *