இந்த ஐபில்-இல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘டின்னர் டேட்’ என பதிவிட்டிருந்தார், ஆனால் அவர் கூட இருந்த பெண்ணின் முகம் தெரியவில்லை.
அதை கண்ட அவருடைய ரசிகர்கள் அந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க தீவிரமாய் இறங்கினர்.
கடைசியாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தது. அவர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அனுஸ்ம்ரிதி சர்க்கார். அவர் பாலிவுட்டில் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது.
வெங்காய ப்ரை, இஷ்ட சகி, ஹீரோயின் மற்றும் சுஸ்வகதம் என தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் அனுஸ்ம்ரிதி சர்க்கார்.
இந்த ஐபில்-இல் புவனேஸ்வர் குமார் பட்டையை கிளப்பி வருகிறார் என்று தான் சொல்லவேண்டும். இந்த ஐபில்-இல் அவர் விளையாடிய 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகள் எடுத்து மரண மாஸ் காட்டுகிறார். ஆனால், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோற்றதால் இந்த ஐபில் தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், இனிவரும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.