எல்லாம் ஜடேஜாவின் நன்மைக்கே... ஜடேஜா சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 1

கடந்த ஐபிஎல் தொடரின் போது பாதியிலேயே ஜடேஜா சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்து வரும் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவிற்கு, கடந்த ஐபிஎல் தொடர் மிக மோசமானதாக அமைந்தது.

கடந்த ஐபிஎல் தொடருக்காக தோனியை விட ஜடேஜாவிற்கு அதிக தொகை கொடுத்து அவரை தக்க வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜடேஜாவையே சென்னை அணியின் கேப்டனாகவும் நியமித்தது.

எல்லாம் ஜடேஜாவின் நன்மைக்கே... ஜடேஜா சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 2

ஜடேஜாவின் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டியை தவிர மற்ற போட்டிகளில் மிக மிக மோசமான தோல்விகளை சந்தித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாறு காணாத தோல்விகளை விட, ஜடேஜா அவரது தனிப்பட்ட விளையாட்டிலும் மோசமாக செயல்பட்டார், பீல்டிங் பேட்டிங் என இரண்டிலும் ரவீந்திர ஜடேஜா கடுமையாக சொதப்பியதால், அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனியிடமே சென்னை அணி கேப்டன் பதவியை ஒப்படைத்தது. அதன்பின் காயம் காரணமாக ஜடேஜா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும் சென்னை நிர்வாகம் அறிவித்தது.

ஜடேஜா அடுத்த தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலான தகவல்கள் ஜடேஜா இனி சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை என்றே தெரிவிக்கின்றன. ஜடேஜாவும் சென்னை அணி குறித்தான தனது பழைய சமூக வலைதள பதிவுகளை நீக்கி சென்னை அணி மீதான தனது கோவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

எல்லாம் ஜடேஜாவின் நன்மைக்கே... ஜடேஜா சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது !! 3

இந்தநிலையில், கடந்த ஐபிஎல் தொடரின் பாதியில் ஜடேஜா திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, “ஜடேஜா ஐபிஎல் தொடரில் சொதப்பினால் அது இந்திய அணியிலும் அவரது இடத்தை கடுமையாக பாதிக்கும் என சென்னை அணியும், குறிப்பாக தோனியும் கருதினர். இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்திற்கு பிரச்சனை வந்துவிட கூடாது என்பதற்காகவே தோனியும், சென்னை அணியும் இணைந்து ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கினர்” என தெரியவந்துள்ளது. பெரும்பாலான ஆங்கில ஊடங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

அதே போல் கடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு சென்னை அணிக்கும், ஜடேஜாவிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை எனவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஜடேஜா அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.