இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் விளாசியுள்ளனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் குவித்துள்ளனர். இதில் ரோதித் 44, மயங்க் அகர்வால் 38, ரஹானே 37, சுந்தர் 62 மற்றும் ஷர்துல் தாகூர் 67 ரன்கள் விளாசி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

இந்திய வீரர்கள் அனைவரும் மோசமான விளையாடி வருகையில் 6 விக்கெட் இழப்பிற்கு பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் நிதானமாக விளையாடி பாட்னர்சிப்பில் 123 ரன்கள் குவித்தனர். 7வது விக்கெட்டில் இவர்களது கூட்டணி ரன் குவிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த இவர்களது ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார். பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாகூர் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 67 ரன்களுடன் போல்டில் விக்கெட் இழந்தார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து விளையாட யாரும் இல்லததால் இவரும் 62 ரன்களுடன் வெளியேறினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய வீரர்கள் தாகூர் மற்றும் சுந்தர் ஆகியோரை குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங் ” ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்கொண்டு நிதானமாக விளையாடி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்களது விக்கெட்களை வீழ்த்த திணறி வருகின்றனர்” என்று கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.
"Just at the moment everything for these batters looks a little bit too comfortable. The Australian bowlers are not taking these two out of their comfort zones at all."
– Ricky Ponting on the current state of play #AUSvIND pic.twitter.com/RL37sXnmog— 7Cricket (@7Cricket) January 17, 2021
