காயமான ஜடேஜா அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகல் ! அவருக்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு !! 1

காயமான ஜடேஜா ! அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகல் ! அவருக்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள் காயம் அடைய துவங்கியுள்ளனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அங்கு தங்கும் அளவிற்கு மிக நீண்ட தொடரில் விளையாடுவார்கள். அந்த நேரத்தில் அதிகபட்சமாக ஒரு அணிக்கு 18 வீரர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் அழைத்துச் செல்லும் ஆனால் இந்த முறை மூன்று அணிக்கும் சேர்த்து 32 வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

எப்போதும் இது போன்ற மிக நீண்ட தொடர் நடக்கும் போது ஒரு சில இந்திய வீரர்கள் காயம் அடைவது வழக்கம். அதிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்லும் போது கண்டிப்பாக குறைந்தது மூன்று முதல் ஐந்து வீரர்கள் காயம் அடைந்து விடுவார்கள். இப்படி காயமடையும் படலம் தற்போது துவங்கியிருக்கிறது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தொடைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக முதல் டி20 போட்டியில் சிரமப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அப்படி இருந்தும் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.

காயமான ஜடேஜா அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகல் ! அவருக்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு !! 2

இதனையடுத்து அவருக்கு மாற்றாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் களமிறங்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார் என்பது வேறு கதை. ஆனால் காயமடைந்த ரவிந்திர ஜடேஜா தற்போது அடுத்த 2 போட்டிகளிலும் இருந்து விலகியுள்ளார். ரவீந்திர ஜடேஜா எப்போதும் காயம் அடைவது கிடையாது. குறிப்பாக அவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வீரருக்கு ஆஸ்திரேலிய மண்ணில் காயம் அடைந்து விட்டது.

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து விலகி இருப்பதால் அணிக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் இல்லாதது அணியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது உறுதி.

காயமான ஜடேஜா அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து விலகல் ! அவருக்கு பதில் மாற்று வீரர் அறிவிப்பு !! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *