இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி கடந்த மூன்று தினங்களாக நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மன்களான கோலி, ரஹானே, புஜாரா, அஸ்வின் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதனால் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டும் குவித்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய பண்ட் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி அதிரடியாக விளையாடி வந்தனர். இதில் பண்ட் 101 ரன்களையும் சுந்தர் 96 ரன்களையும் குவிக்க இதைத்தொடர்ந்து 8வது விக்கெட்டில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 43 ரன்களை குவித்தார். 

மாஸ்டர் விஜய் போஸ்டரில் பண்ட் ! ரசிகர்களால் பகிரப்படும் சூப்பரான மீம்ஸ் ! 2

இதன்மூலம் இந்திய அணி 365 ரன்களை குவித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிஸ்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேலின் சுழற்பந்தில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன்மூலம் இந்திய இன்னிஸ் வெற்றி பெற்று 25 ரன்களில் போட்டியை வென்றது. 

இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்று தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்திய அணி இந்த வெற்றி குறித்து அனைவரும் பாராட்டி வரும் வருகின்றனர்.

மாஸ்டர் விஜய் போஸ்டரில் பண்ட் ! ரசிகர்களால் பகிரப்படும் சூப்பரான மீம்ஸ் ! 3

இந்நிலையில், இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா தொடரை போலவே இந்த இங்கிலாந்து தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த இங்கிலாந்து தொடரில்  பண்ட் 2 அரைசதம் மற்றும் ஒரு சதம் விளாசி இருக்கிறார்.  அதுமட்டுமின்றி இந்த இங்கிலாந்து தொடரில் அதிக சிக்சர்(10) அடித்த வீரராகவும் இருக்கிறார். 

மாஸ்டர் விஜய் போஸ்டரில் பண்ட் ! ரசிகர்களால் பகிரப்படும் சூப்பரான மீம்ஸ் ! 4

இந்த நாலாவது டெஸ்ட் போட்டியில் பண்ட் தனது அரைசதத்தை நிறைவு செய்த பின்பு அனைத்து பந்துகளையும் அதிரடியாக விளையாடி தனது சதத்தை பூர்த்தி செய்தார். பண்ட்டின் இந்த ஆட்டத்தை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் பண்ட்டின் ரசிகர்கள் விஜயின் மாஸ்டர் படம் போஸ்டருடன் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக பண்ட்டின் புகைப்படத்தை வைத்து எடிட் செய்து இணையதளத்தில் வைரலாகி இருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில்  அனைவராலும் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *