என்னொரு வெறி இந்த பயனுக்கு..,பயிற்சியில் பந்தை தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் ! வைரலாகும் வீடியோ 1

இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து தொடரில் பங்குபெற்ற ஐபிஎல் வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது ஐபிஎல் அணிகள் உடன் இணைந்து இருக்கின்றனர். இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

என்னொரு வெறி இந்த பயனுக்கு..,பயிற்சியில் பந்தை தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் ! வைரலாகும் வீடியோ 2

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சொந்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பைகளை வென்று இருக்கிறது.

என்னொரு வெறி இந்த பயனுக்கு..,பயிற்சியில் பந்தை தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் ! வைரலாகும் வீடியோ 3

இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தயாராகும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், ஸ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரிஷப் பண்ட் வலைப்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் தனக்கு கிடைத்த கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் பண்ட் நான் கேப்டனாக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி. சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் நான் எனது அணியை வெற்றி அடைய முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். இதற்காக அவர் தீவிரமாக வலைப்பயிற்சி செய்து வருகிறார்.

என்னொரு வெறி இந்த பயனுக்கு..,பயிற்சியில் பந்தை தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட் ! வைரலாகும் வீடியோ 4

வலைப்பயிற்சியில் பண்ட் எதிர்கொள்ளும் அனைத்து பந்துகளையும் தெறிக்க விடுகிறார். இது ரசிகர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி அடைய காரணமாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *