ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த இடத்தில்தான் களமிறங்க வேண்டும் - செவி சாய்ப்பார விராட் கோலி? 1

வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் துவங்க இருக்கிறது. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இந்த போட்டியின் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் சுற்றில் முதல் டெஸ்ட் தொடரை வெற்றி பெறும் வண்ணம் விளையாட வேண்டும் என்கிற நோக்கம் இந்த இரு அணிகளுக்கும் இடையே உள்ளது. தற்பொழுது இந்திய அணி கவுண்டி கிரிக்கெட் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்கள் உடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரருமான தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசர் ஹூசைன் இந்திய அணி குறித்து ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த இடத்தில்தான் களமிறங்க வேண்டும் - செவி சாய்ப்பார விராட் கோலி? 2

ரிஷப் பண்ட் ஏழாவது இடத்தில் தான் விளையாட வேண்டும்

சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட் ஆறாவது இடத்தில் களம் இறங்கினார். அவரிடம் பொறுமை சற்று குறைவாக காணப்படுகிறது. இங்கிலாந்து போன்ற மைதானங்களில் எப்பொழுதும் ஒரு கிரிக்கெட் வீரர் சற்று நிதானித்து பொறுமையாக விளையாட வேண்டும். எனவே நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரில் அவர் ஒரு இடம் தள்ளி 7வது இடத்தில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் விளையாடுவது சரியாக இருக்காது

மேலும் பேசிய அவர் தற்பொழுது உள்ள இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிக அற்புதமாக உள்ளது. எனவே இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து விட்டால், நிச்சயமாக நம்பிக்கையுடன் வந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். இந்திய அணி சற்று நிதானித்து விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த இடத்தில்தான் களமிறங்க வேண்டும் - செவி சாய்ப்பார விராட் கோலி? 3

மேலும் மைதானம் சற்று வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இவர்கள் இருவரும் இணைந்து அணியில் விளையாடுவது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றும் நாசர் ஹூசைன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஓபனிங் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.அவருக்கு தகுந்த மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும் என்றும் நாசர் ஹூசைன் தனது விளக்கத்தினை கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *