ஷிகர் தவானுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்..? ரசிகர்கள் மகிழ்ச்சி

காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அடுத்த மூன்று வாரங்கள் விலகிய ஷிகர் தவானுக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலககக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அடுத்ததாக நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போது கைவிரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பீல்டிங்கில் இருந்து பாதியில் வெளியேறிய இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் தேவை என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளதால் ஷிகர் தவான் அடுத்த மூன்று வாரங்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஷிகர் தவானுக்கு பதிலாக அடுத்த மூன்று வாரங்கள் கே.எல் ராகுல் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதே போல் கே.எல் ராகுல் இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரேயஸ் ஐயரை விட ரிஷப் பண்ட்டே நான்காவது இடத்திற்கு பொருத்தமானவர் என்று சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஷிகர் தவானுக்கு பதிலாக புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லை விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது பின்னரே தெரியவரும். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...