மிக முக்கிய வீரருக்கே இடம் இல்லை; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது.

மிக முக்கிய வீரருக்கே இடம் இல்லை; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிற்கு இடம் கொடுக்கப்படவில்லை, அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் காயம் காரணமாக ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணியுடனான முழு தொடரிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா விளையாடாததால் துணை கேப்டன் பதவி கே.எல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய மாயன்க் அகர்வாலுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. கொல்கத்தா அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும் இந்திய அணி இந்த தொடரில் வாய்ப்பு கொடுத்துள்ளது.

மிக முக்கிய வீரருக்கே இடம் இல்லை; ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

டி.20 தொடருக்கான இந்திய அணி;

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், மயன்க் அகர்வால், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, ஷமி, சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *