உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்டும் இருப்பார்; எம்.எஸ்.கே பிரசாத் உறுதி

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு கட்டாயம் இடமுண்டு என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்து, தொடரில் புஜாராவிற்கு அடுத்தபடி அதிக ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திது.

இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-

சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.

கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார்.  இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ‌ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்” என்றார்.

உலகக் கோப்பைக்கான வீரர்கள் திட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் இருப்பதால், தோனியின் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர் அடுத் தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக் கான இடத்தை தக்க வைக்க முடியும் என்கிறார்கள், முன்னாள் வீரர்கள் சிலர்.



 • SHARE

  விவரம் காண

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி !!

  புதிய டி.20 தொடரில் கால் பதிக்கும் யுவராஜ் சிங்; ரசிகர்கள் மகிழ்ச்சி இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம்...

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து !!

  ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரில் யார் பெஸ்ட்..? சச்சின் டெண்டுல்கர் புது கருத்து விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய...

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை !!

  திட்ட வேண்டாம்னு சொல்ல; கொஞ்சம் மரியாதையா திட்டுங்கனு தான் சொல்றேன்; பாகிஸ்தான் கேப்டன் வேதனை எங்கள் விளையாட்டின் மீது விமர்சனம் செய்யுங்கள், ஆனால், அத்துமீறி...

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

  இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...