கடைசி இரண்டு தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம்; பாராட்டும் லக்‌ஷ்மண் !! 1
V. V. S. Laxman. (File Photo: IANS)

இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக ரிஷப் பண்ட் திகழ்ந்ததாக முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகளாக இருந்தாலும், இந்த தொடர் துவங்கும் முன் பேசிய பெரும்பாலான முன்னாள் வீரர்கள், இந்த தொடரில் இங்கிலாந்து அணியே வெல்லும் என்றே கணித்திருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டையும் சமாளிப்பதே இந்திய அணிக்கு மிக கடினமாக இருக்கும் என்பதே பெரும்பாலான முன்னாள் வீரர்களின் கருத்தாக இருந்தது. முன்னாள் வீரர்கள் கணித்திருந்ததை போன்றே இந்திய அணி முதல் போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

கடைசி இரண்டு தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம்; பாராட்டும் லக்‌ஷ்மண் !! 2

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் அருகில் கூட செல்ல முடியாமல் மிக மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணியின் ஆட்டம் இரண்டாவது போட்டியில் இருந்தே வேறு மாதிரியாக இருந்தது. கடைசி மூன்று போட்டியிலும் ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து அணியால் இந்திய அணியின் அருகில் கூட நெருங்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியது.

இந்திய அணியின் இந்த வெற்றியில் இளம் வீரர்களின் பங்கே மிக முக்கியமானது என்றால் அது மிகையல்ல. ரோஹித் சர்மாவை மற்ற அனைத்து சீனியர் பேட்ஸ்மேன்களும் ஒரிரு இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக விளையாடினார், ஆனால் இளம் வீரர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை இறுதி வரை போராடியதே இந்திய அணிக்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது. குறிப்பாக ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர் ஆகியோரே இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர், இதன் மூலம் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும், கவனத்தையும் இருவரும் பெற்றுள்ளனர். முன்னாள் வீரர்கள் பலர் வாசிங்டன் சுந்தரையும், ரிஷப் பண்ட்டையும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

கடைசி இரண்டு தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம்; பாராட்டும் லக்‌ஷ்மண் !! 3

அந்தவகையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மன், இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் தான் மிகப்பெரும் நம்பிக்கையாக திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.வி.எஸ் லக்‌ஷ்மண் பேசுகையில், “ இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடரின் இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கையாக ரிஷப் பண்ட் தான் இருந்தார் என நான் நம்புகிறேன். பேட்ஸ்மேனாக மட்டுமல்ல விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் தனது வேலையை மிக சரியாக செய்து கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் முறையில் நிறைய முன்னேற்றங்கள் தெரிகிறது. குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சை ரிஷப் பண்ட் பயமில்லாமல் எதிர்கொண்டது ஆச்சரியமாக இருந்தது. எதிர்கால இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கை நாயகனாக ரிஷப் பண்ட் இருப்பார். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போதும் ரிஷப் பண்ட் எவ்வித பயமும் இல்லாமல் தனது நேர்த்தியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியும் பெற்று கொடுத்தார், இது அவ்வளவு எளிதான விசயம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *