சர்வதேச கிரிக்கெட்டில் 'ஹிட்மேன்' ரோகித் வரலாற்று சாதனை.. இதுவரை எந்த இந்தியரும் எட்டியதில்லை! 1

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுசாதனை படைத்தார் துவக்க வீரர் ரோகித் சர்மா.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி–20 தொடரில் ஆடிவருகிறது.

முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.

அடுத்ததாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை துவம்சம் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று தொடரை சமன் செய்தது.

சர்வதேச கிரிக்கெட்டில் 'ஹிட்மேன்' ரோகித் வரலாற்று சாதனை.. இதுவரை எந்த இந்தியரும் எட்டியதில்லை! 2
I

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் போலார்டு, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வழக்கம்போல, இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் விண்டீஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நான்குபுறமும் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி வருகின்றனர்.

குறிப்பாக, காட்ரெல் வீசிய போட்டியின் 3வது ஓவரின் முதல் பந்தை, ரோகித் சிக்சர் அடித்தார். இது சர்வதேச அரங்கில் இவர் அடித்த 400வது சிக்சராகும். இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 'ஹிட்மேன்' ரோகித் வரலாற்று சாதனை.. இதுவரை எந்த இந்தியரும் எட்டியதில்லை! 3

இந்திய வீரர்கள் மத்தியில், ரோகித் சர்மாவிற்கு அடுத்த இடத்தில் தோனி 359 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சர்வதேச அளவில் 400 சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவிற்கு கிடைத்துள்ளது.

விண்டீஸ் வீரர் கெய்ல் 534 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் அப்ரிதி 476 சிக்ஸர்களுடன் இடண்டாம் இடத்திலும் உள்ளனர்.

சர்வதேச டி–20 அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் ரோகித் 116 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *