என்ன ஆனாலும் இந்த இரண்டு பேரையும் இனி மாத்திடவே கூடாது; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஆகாஷ் சோப்ரா !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது டி20 தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இரண்டு வீரர்கள் எப்பொழுதுமே விளையாட வேண்டும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 தொடர்களிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.

என்ன ஆனாலும் இந்த இரண்டு பேரையும் இனி மாத்திடவே கூடாது; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஆகாஷ் சோப்ரா !! 2

என்னதான் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டனர் இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு வேலையும் இல்லாமல் எளிதாக அமைந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பக்தர்களின் சந்திப்பின்போது இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

என்ன ஆனாலும் இந்த இரண்டு பேரையும் இனி மாத்திடவே கூடாது; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்த ஆகாஷ் சோப்ரா !! 3

அதில் பேசிய அவர், உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் விளையாடியதை மறந்து விடுங்கள், அவர்கள் அதற்கு அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் மிக சிறந்த முறையில் விளையாடி அசத்தி வருகின்றனர், இதன் காரணமாக இந்திய அணியின் டி20 தொடர்களில் துவக்க வீரர்களாக எப்பொழுதுமே ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து விளையாட வேண்டும்.

மேலும் ரோஹித் சர்மா குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா டி20 தொடர் என்று வந்துவிட்டாலே ரோகித் சர்மா எந்த ஒரு கவலையும் இல்லாமல் மிகவும் அதிரடியாக ஆடும் ஒரு வீரர், மேலும் அவருடைய பெயருக்கு கீழ் தற்பொழுது ஒரு சீரியஸ் வெற்றி பெற்றுள்ளது, என்று ரோஹித் சர்மாவை மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *