இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 1

ரோகித் சர்மா, திலக் வர்மா இருவரும் பேட்டிங்கில் அசத்தினர். கடைசி ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் ரோகித் சர்மா.

இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 2

இதனையடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை மந்தமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். வரிசையாக ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் இவர் நிதானமாக விளையாடி அரைசதம் கண்டார்.

ஆறாவது விக்கெட்டிற்கு அக்சர் பட்டேல் உடன் ஜோடி சேர்ந்து 67 ரன்கள் குவித்தனர். 25 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அக்சர் பட்டேல் ஆட்டம் இழந்தார். டேவிட் வார்னர் 47 பந்துகளுக்கு 51 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 19.4 ஓவர்களில் 172 ரன்கள் அடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல் அவுட் ஆனது.

இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 3

இந்த மைதானத்தில் 173 ரன்கள் இலக்கு எட்டக்கூடியதாக தெரிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக இசான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். மிகவும் நிதானமாக விளையாடி இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 71 ரன்கள் சேர்த்தது.

இஷான் கிஷன் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்ததாக உள்ளே வந்த திலக் வர்மா தனது சிறந்த பார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். ரோகித் சர்மாவுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்க்க உதவினார். இவரும் தவறான நேரத்தில் 41 ரன்கள் அடித்திருந்தபோது அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 4

அடுத்துவந்த சூரியக்குமார் யாதவ் முதல் பந்தியிலேயே கோல்டன் டக்காகி மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.  மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 29 பந்துகளில் அரைசதம் கடந்து 45 பந்துகளில் 65 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 5

கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து, அந்த ஓவரில் 15 ரன்கள் குவிக்க உதவினார் டிம் டேவிட்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மிகவும் கட்டுக்கோப்பாக வீசிய ஆன்ட்ரிக் நார்க்கியா, கடைசி ஒரு பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே தேவை என்று நிலைக்கு கொண்டு வந்தார். அப்போது டெல்லி வீரர்கள் பீல்டிங்கில் செய்த சில தவறால், டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி இரண்டு ரன்கள் ஓடி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த ரோகித் சர்மாவுக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்... பட்டைய கிளப்பிய ஹிட்மேன்.. மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி! 6

இறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *