தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இளம் வீரர் ஷுப்மான் கில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதேசமயம் மேற்கிந்தியத்தீவுகள் டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். மற்றவகையில் இந்திய அணியில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய அதே அணிதான் களமிறங்குகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் பேட்டிங்கில் சொதப்பிய கே.எல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 30 இன்னிங்ஸ்களில் ராகுல் 664 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அதிகபட்சமாக ஓவல் டெஸ்ட் போட்டியில் 149 ரன்கள் சேர்த்ததுதான் ராகுலின் அதிகபட்சமாகும்.

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரில் ராகுல் 4 இன்னிங்ஸ்களிலும் 44, 38, 13, 6 ஆகிய ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமில்லாத டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி வென்றது. இந்த தொடரில் சிறப்பாகச் ஷுப்மான் கில் செயல்பட்டதால் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளார்.

ADELAIDE, AUSTRALIA – DECEMBER 09: Rohit Sharma of India looks dejected after being dismissed by Nathan Lyon of Australia during day four of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 09, 2018 in Adelaide, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இதனால் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து ரோஹித் சர்மா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேற்கி்ந்தியத்தீவுகள் தொடரில் ரோஹித் சர்மா இடம் பெற்றபோதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் ராகுலுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்போது ராகுல் இல்லாத நிலையில் ரோஹித் சர்மாதான் ஆட்டத்தைத் தொடங்குவார்.

புஜாரா, விராட் கோலி அடுத்ததாக நடுவரிசையில் ரஹானே, ஹனுமா விஹாரி என பேட்டிங் வரிசை வலுவாகவே அமைந்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகளும் உள்நாட்டில் நடப்பதால், அஸ்வின் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற அதிகமான வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பிங் பணிக்கு ஏற்கனவே விருதிமான் சாஹா, ரிஷப் பந்த் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ஷுப்மான் கில் வேறு இடம் பெற்றுள்ளார். ஆக இந்த தொடரில் 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவும் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஆடம் கில்கிற்ஸ்ட் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித்சர்மா இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது….

ரோகித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கண்டிப்பாக களம் இறக்க வேண்டும். அவரை நிராகரிக்க எந்த ஒரு காரணமும் இல்லை. குறிப்பாக துவக்க வீரராக அவர் நன்றாக ஆடுவார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் இந்திய அணியின் துவக்க வீரராக ரோகித் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் இடங்களில் கிரிஸ்ட். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...