லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்தியா 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடி ஆடி அவுட் ஆகாமல் 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்களும், 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில்  பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களம் இறங்கினர்.

துவக்கத்தில் இந்த ஜோடி நிதானமாக ரன்களை சேகரித்து படிப்படியாக வேகத்தை அதிகரித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் ஆட்டத்தின் அனல் பறந்தது. அவருடைய பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறின. பவுண்டரிகளும் சிக்சரும் ரோகித் சர்மா விளாசித்தள்ளினார். மறுமுனையில், ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். இதனால், விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 100 ரன்களை கடந்தது. 13.6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எட்டியிருந்த போது, ஷிகர் தவான் 43 ரன்களில் (41 பந்துகள்) வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய இளம் வீரர்  ரிஷாப் பண்ட் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஆனால், மறு முனையில், சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்து ரசிகர்களுக்கு, ரோகித் சர்மா தீபாவளி விருந்து படைத்தார். அவருக்கு பக்க பலமாக ராகுலும் விளையாடினார். அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி ஓவரில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மா அடிக்கும் 4-வது சதம் இதுவாகும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 16 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டிஸ் அணியின் சார்பில் ஹோப், ஹட்மயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியில் அதிகபட்சமாக பிராவோ 23 ரன்கள் எடுத்தார். 

இறுதியில் கேப்டன் பிரித்வொய்ட் 15(19) ரன்களும், தாமஸ் 8(4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், கலில் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் வெஸ்டிண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.



  • SHARE
    Cricket Fan - Dhoni Lover - CSK Forever

    விவரம் காண

    ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் !!

    ஐ.பி.எல் 2019; விலைபோக வாய்ப்பில்லாத ஐந்து முக்கிய வீரர்கள் கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து...

    2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை !!

    2019ம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்லும்; டிவில்லியர்ஸ் நம்பிக்கை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா அணி...

    ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்!

    ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க காத்திற்கும் 5 வீரர்கள்! 2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச்...

    ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் !!

    ஆஸ்திரேலியா தொடரில் பும்ராஹ் மாஸ் காட்டுவார்; முன்னாள் வீரர் ஆரூடம் ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர் பும்ராஹ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும்...

    என்னை தக்க வைத்ததன் மூலம் ஆச்சரியம் அடைந்தேன்: கமலேஷ் நாகர்கோட்டி

    2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகி வரும் அணிகள், தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டும், மற்றவர்களை விடுவித்தும் வருகின்றன. அதன் பட்டியல்...