இந்தியாவின் மிகச்சிறந்த துவக்க வீரர் இவர்தான்: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஓப்பன் டாக்! சச்சின், சேவாக், கங்குலி இல்லை! 1

இந்திய மண்ணில் நடந்த சர்வதேச போட்டிகளில் அதிகபட்சமாக சிக்சர்களை அடித்த எம்.எஸ்.தோனியை மிஞ்சி முதலிடம் பிடித்தார் ரோஹித் சர்மா.
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொருத்தவரை ஆல்-டைம் டாப் 5 சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் தான் ரோஹித் சர்மா என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க தோனி முடிவு செய்ததில் இருந்து அவருடைய வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. ஒரு திறமையான இளைஞராக இருந்து, இந்திய அணியில் முக்கியமான வீரராக இப்போது உருவெடுத்துள்ளார் ரோஹித் சர்மா.இந்தியாவின் மிகச்சிறந்த துவக்க வீரர் இவர்தான்: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஓப்பன் டாக்! சச்சின், சேவாக், கங்குலி இல்லை! 2

ஒரு தொடக்க வீரராக, ரோஹித் சர்மா 140 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 27 சதங்களுடன் 7148 ரன்கள் அடித்துள்ளார். அதேசமயம் டி 20 போட்டிகளில், 76 இன்னிங்ஸ்களில் இருந்து 2313 ரன்களை அடித்ததோடு நான்கு சதங்களையும் அடித்தார். டி 20 போட்டியில் தனிநபர் அடித்த அதிகபட்ச சதம் இதுவாகும்.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்வாளர் கிரிஸ் ஸ்ரீகாந்த், ரோஹித் சர்மா குறித்து பேட்டி ஒன்றில் பெருமையாக பேசியுள்ளார். அதில், “உலக கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக நான் அவரை மதிப்பிடுவேன்.இந்தியாவின் மிகச்சிறந்த துவக்க வீரர் இவர்தான்: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஓப்பன் டாக்! சச்சின், சேவாக், கங்குலி இல்லை! 3 ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய சாதனையாக நான் பார்ப்பது, அவர் அதிரடியாக விளையாடி சதம் மற்றும் இரட்டை சதங்களை அடிக்க முயற்சிப்பது தான். அது ஆச்சரியமான ஒன்று. அவர் நிச்சயமாக, ஒருநாள் கிரிக்கெட்டைப் பொருத்தவரை முதல் 3 அல்லது 5 ஆல்-டைம் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் தான்” என்று கூறியுள்ளார்.

2019 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றார் ரோஹித் சர்மா. உலகக் கோப்பையின் ஒரே தொடரில் (2019) ஐந்து சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய மண்ணில் நடந்த சர்வதேச போட்டிகளில் அதிகபட்சமாக சிக்சர்களை அடித்த எம்.எஸ்.தோனியை மிஞ்சினார்.இந்தியாவின் மிகச்சிறந்த துவக்க வீரர் இவர்தான்: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஓப்பன் டாக்! சச்சின், சேவாக், கங்குலி இல்லை! 4

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிவேகமாக 7000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரோஹித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *