விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த “ஹிட்மேன்” ரோஹித் சர்மா !! 1

விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்ட்னான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த “ஹிட்மேன்” ரோஹித் சர்மா !! 2

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கெய்ல் மெயர்ஸ் 73 ரன்களும், ரோவ்மன் பவல் 23 ரன்களும் எடுத்தனர்.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த “ஹிட்மேன்” ரோஹித் சர்மா !! 3

இதன்பின் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் 76 ரன்களும், ரிஷப் பண்ட் 33* ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

விராட் கோலியை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த “ஹிட்மேன்” ரோஹித் சர்மா !! 4

இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் டி.20 போட்டிகளில் தனது 60வது சிக்ஸரை பதிவு செய்த ரோஹித் சர்மா, இதன் மூலம் டி.20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் கேப்டனான விராட் கோலி 59 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார், தற்போது இதனை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

டி.20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய கேப்டன்கள்;

ரோஹித் சர்மா – 60 சிக்ஸர்கள்
விராட் கோலி – 59 சிக்ஸர்கள்
தோனி – 34 சிக்ஸர்கள்

Leave a comment

Your email address will not be published.