எல்லோருக்கும் நன்றி… ரோஹித் சர்மா உருக்கமான ட்வீட்
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்றது.

இதில் க்ரூணல் பாண்டியா, பொலார்டு உள்ளிட்ட சில வீரர்கள் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பினாலும், பெரும்பாலான வீரர்கள் வேறு வேறு அணிக்கு சென்றுள்ளனர்.
Will miss this super fun and talented bunch, big thanks to all you guys for putting up a great effort and contributing towards the teams success. I wish you the best going forward ? @mipaltan pic.twitter.com/KIb6U6ngGG
— Rohit Sharma (@ImRo45) January 29, 2018
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள ட்வீட்டில் “திறமை மற்றும் ஜாலியான உங்கள் அனைவரையும் நான் மிஸ் செய்ய போகிறேன். அணியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரருக்கும் எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து வரும் தொடர்களில் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவும் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.