நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய விண்டீஸ் வீரர் பிராவோவுக்கு பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த விண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.

காயம் காரணமாக விலகிய டூவைன் பிராவோ; மாற்று வீரர் அறிவிப்பு !! 2

வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்து சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்தும் டுவைன் பிராவோ விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இத்னால் வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு என்னும் வீரர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான விண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீடியோ வெளியிட்ட டூவைன் பிராவோ;

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பிராவோ அடுத்த ஓரிரு தினங்களில் பிராவோ நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிராவோ உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிராவோ வெளியிட்டுள்ள வீடியோவில், “இது வருத்தமான செய்தி. என் அணி சிஎஸ்கேவை விட்டு விலகுவது வருத்தமாக உள்ளது. நம் சிஎஸ்கே ரசிகர்கள் அணியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்” என்றார் பிராவோ.

காயம் காரணமாக விலகிய டூவைன் பிராவோ; மாற்று வீரர் அறிவிப்பு !! 3

மேலும், “இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. நம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவும் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தோம். ஆனாலும், அது முடிவில் பிரதிபலிக்கவில்லை” என உருக்கமாக பேசியுள்ளார் பிராவோ.

பிராவோவிற்கு இது தான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் அடுத்தடுத்த தொடர்களில் சென்னை அணி மீண்டும் பிராவோவை அணியில் எடுக்காது என்றே தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *