இவர் மட்டும் ஒழுங்கா விளையாடலேனா டெல்லி அணியின் கதை அவ்வளவு தான்;டெல்லி அணிக்கு எச்சரிக்கை கொடுத்த சஞ்சே மன்ஜரேகர் !! 1

ரிஷப் பண்ட் மட்டும் ரன்களை குவிக்க வில்லை என்றால் டெல்லி அணியின் பேட்டிங் அவ்வளவுதான் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த வருடத்திற்கான நடப்பு தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் தோல்வியடைந்து வருகிறது.



டேவிட் வார்னர், நோர்கியா போன்ற சமகால கிரிக்கெட் உலகின் மிக சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டியிலும் தோல்வியும் அடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக போராடி வருகிறது.

இவர் மட்டும் ஒழுங்கா விளையாடலேனா டெல்லி அணியின் கதை அவ்வளவு தான்;டெல்லி அணிக்கு எச்சரிக்கை கொடுத்த சஞ்சே மன்ஜரேகர் !! 2



டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தோல்விகளுக்கு, அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆடும் லெவனை தேர்வு செய்வதில் தவறு செய்வதோடு, போட்டியின் போது ரிஷப் பண்ட் எடுக்கும் சில தவறான முடிவுகளே டெல்லி அணியின் தோல்விகளுக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதையும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இவர் மட்டும் ஒழுங்கா விளையாடலேனா டெல்லி அணியின் கதை அவ்வளவு தான்;டெல்லி அணிக்கு எச்சரிக்கை கொடுத்த சஞ்சே மன்ஜரேகர் !! 3

அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மட்டும் கிரிக்கெட் ஆலோசகரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரிஷப் பண்டின் மோசமான பேட்டிங் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “டெல்லி அணியில் அதிரடி வீரர் பிரித்வி ஷா உள்ளார், ஒருவேளை டெல்லி அணி அவருக்கு வாய்பளித்தால் டெல்லி அணியின் பேட்டிங் வேற லேவலாக இருக்கும்,பிரித்வி ஷாவின் ஸ்ட்ரைக் ரேட் 150, டேவிட் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் 140 என சிறப்பாக விளையாடுகிறார்கள்,இதனால் ரிஷப் பண்ட் கட்டாயம் ரன்களை குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் , அப்படி இல்லை என்றால் டெல்லி அணியின் பேட்டிங் line-up மிகவும் பலவீனமாக அமைந்து விடும், டெல்லி அணியின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பந்துவீச்சில் டெல்லி அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது, அதில் சில வீரர்கள் மட்டுமே மோசமான பார்மில் உள்ளனர். இதனால் பிரித்வி ஷாவை அணியில் இணைத்தால், நன்றாக இருக்குமென நம்புகிறேன்”, என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.