இவர் சரியாக விளையாடாத வரை டெல்லி அணிக்கு வெற்றியே கிடைக்காது; உறுதியாக சொல்லும் முன்னாள் வீரர் !! 1

டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தனது பங்களிப்பை சரியாக செய்யாத வரை டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவு தான் என முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த வருடத்திற்கான நடப்பு தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த போட்டியில் தோல்வியடைந்து வருகிறது.

இவர் சரியாக விளையாடாத வரை டெல்லி அணிக்கு வெற்றியே கிடைக்காது; உறுதியாக சொல்லும் முன்னாள் வீரர் !! 2

டேவிட் வார்னர், நோர்கியா போன்ற சமகால கிரிக்கெட் உலகின் மிக சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நடப்பு தொடரில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டியிலும் தோல்வியும் அடைந்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக போராடி வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தோல்விகளுக்கு, அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்டின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆடும் லெவனை தேர்வு செய்வதில் தவறு செய்வதோடு, போட்டியின் போது ரிஷப் பண்ட் எடுக்கும் சில தவறான முடிவுகளே டெல்லி அணியின் தோல்விகளுக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் பேட்டிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதையும் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இவர் சரியாக விளையாடாத வரை டெல்லி அணிக்கு வெற்றியே கிடைக்காது; உறுதியாக சொல்லும் முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தனது பங்களிப்பை சரியாக செய்யாத வரை டெல்லி அணிக்கு பிரச்சனை தான் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “டெல்லி அணியில் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா போன்றோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் ரிஷப் பண்ட்டும் தனது பங்களிப்பை சரியாக செய்து, ரன்கள் குவிக்க வேண்டும். ரிஷப் பண்ட் தனது பங்களிப்பை சரியாக செய்யாத வரை டெல்லி அணி பலவீனமான அணியாக இருக்கும். ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்தால் மட்டுமே டெல்லி அணியால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும்” என்று தெரிவித்தார்.

சென்னை அணியுடனான கடந்த போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று மாலை (11-5-22) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாகும்.

Leave a comment

Your email address will not be published.