ராஜஸ்தான் vs பஞ்சாப்: முதல் முறையாக பஞ்சாப் அணியிடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது ராஜஸ்தான்!! 1

14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி.

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்து, களமிறங்கினார்.

பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் களம் கண்டனர். சென்ற ஆண்டை போலவே அதிரடியான ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்த்த நிலையில், ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.

ராஜஸ்தான் vs பஞ்சாப்: முதல் முறையாக பஞ்சாப் அணியிடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியது ராஜஸ்தான்!! 2

வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்து சதம் வாய்ப்பை நழுவவிட்டார். 79 ரன்களில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், 4000 ரன்களை கடந்த ஒன்பதாவது வீரர் ஆகவும், 2 வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையும் பெற்றார். இதற்கு முன்பு வார்னர் 4000 கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மயங்க் அகர்வால் 24 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதி வரை, சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 1 சிக்ஸரும் 6 பவுண்டறிகளும் அடங்கும்

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெடுகள் இழந்து, 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி மற்றும் க்ரிஷ்ணப்பா கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கி ஆடி வருகிறது ராஜஸ்தான் அணி.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் பட்லர் இருவரும் அதிரடியில் இறங்கினர். ரஹானே 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் வெளியேறினார். அதன் பின்னும் சளைக்காமல் அதிரடியை தொடர்ந்தார் பட்லர். சாம்சன் சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், அஸ்வின் சூசகமாக செயல்பட்டு பட்லரை வெளியேற்றினார். அதாவது பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்னரே வெளியே வந்துள்ளார் பட்லர். இதை பயன்படுத்தி ரன் அவுட் செய்தார்.

அங்கிருந்து ஆட்டம், பஞ்சாப் வசம் சென்றது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சாம்சன் தவிர வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பஞ்சாப் அணி. இறுதியில் 14 ரன்களில் தோல்வியை தழுவியது.

ட்விட்டர் ரியாக்ஷன்:

https://twitter.com/RealKartikk/status/1110243042802294786

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *