சென்னை vs ராஜஸ்தான்; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது ராஜஸ்தான் !! 1

சென்னை vs ராஜஸ்தான்; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது ராஜஸ்தான் !!

ஐ.பி.எல் டி.20 தொடரில் ராஜஸ்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை vs ராஜஸ்தான்; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது ராஜஸ்தான் !! 2

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

புனே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிக்னியா ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மாவும், முரளி விஜய்க்கு பதிலாக  சுரேஷ் ரெய்னாவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை vs ராஜஸ்தான்; டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது ராஜஸ்தான் !! 3

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் டி.ஷார்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹென்ரிச் க்ளேசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குல்கர்னேவிற்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, தீபக் சாஹர், கரன் சர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ரஹானே, ராகுல் த்ரிபதில், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஹென்ரிச் க்ளேசன், ஸ்டூவர்ட் பின்னி, கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட், பென் லாக்லின்.

Leave a comment

Your email address will not be published.