விராட் கோலி, கே.எல் ராகுலின் சாதனை காலி... டி.20 போட்டிகளில் கில்லி என்பதை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்வாட் !! 1
விராட் கோலி, கே.எல் ராகுலின் சாதனை காலி… டி.20 போட்டிகளில் கில்லி என்பதை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்வாட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

விராட் கோலி, கே.எல் ராகுலின் சாதனை காலி... டி.20 போட்டிகளில் கில்லி என்பதை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்வாட் !! 2

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்த இந்திய அணி, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 3-1 என்ற கணக்கில் டி.20 தொடரையும் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டி உள்பட நடப்பு தொடரில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ருத்துராஜ் கெய்க்வாட், இதன் மூலம் டி.20 போட்டிகளில் புதிய சாதனையும் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியின் மூலம் டி.20 போட்டிகளில் 4000+ ரன்களை கடந்த ருத்துராஜ் கெய்க்வாட், இதன் மூலம் டி.20 போட்டிகளில் மிக குறைந்த இன்னிங்ஸில் 4000+ ரன்கள் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டி.20 போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 4000 ரன்கள் கடந்த இந்திய வீரர்கள்;

ருத்துராஜ் கெய்க்வாட் – 116* இன்னிங்ஸ்

கே.எல் ராகுல் – 117 இன்னிங்ஸ்

விராட் கோலி – 128 இன்னிங்ஸ்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *