இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்; ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அந்த அணியின் கேப்டன் கோஹ்லி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதாலும், ஒருவர் கூட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாதலாலும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்த பெங்களூர் அணி வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்; ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய டூபிளசி 13 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பத்தி ராயூடு 39 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், போட்டியின் இறுதி வரை நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியின் மற்றொரு துவக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் 65 ரன்களும், கடைசி நேரத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி 19 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்; ஆட்டநாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி !! 3

65 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகு பேசியதாவது;

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக முக்கியமாக அணிக்கு வெற்றி தேடி தருவதே என்னுடைய எண்ணமாக இருந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வேண்டும் என நினைத்தேன். அமீரகம் வந்தபோது நான் மட்டுமே கொரோனா காரணமாக அதிகமான நாள்கள் தனிமையில் இருந்தது. அது மிகவும் கடினமான நாட்கள். நிச்சயம் ஏதோ ஒரு ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடுவேன் என நினைத்திருந்தேன். அது இன்று நடந்தது. பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. ஆனால் சரியான கேப்புகளில் என்னால் பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. அதேபோல எந்த பவுலரை விளாச வேண்டும் விளாசக் கூடாது என கவனமாக இருந்தேன் என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *