பஞ்சாப் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் 

ஐ.பி.எல் 2019ம் ஆண்டு தொடருக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரயான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) அணிகள் தலா இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளது.

பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளுமே கடந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது. ஆனால் கடந்த முறையும் இந்த அணிகளின் கனவு தகர்ந்தது. இதில் குறிப்பாக கிறிஸ் கெய்ல், கே.எல் ராகுல் போன்ற பல அதிரடி ஆட்டக்காரர்களை கோடி கோடியாய் கொட்டி ஏலத்தில் எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது ரசிகர்களுக்கும், அந்த அணி நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் 2019 சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் மற்ற அணிகளை போலவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் தீவிரமாக உள்ளது. இதற்காக தனது அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவம் பஞ்சாப் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரையன் ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரையன் ஹாரிஸ் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என பஞ்சாப் நிர்வாகம் சமூக வலைதளங்களில் மார் தட்டி வருகிறது.

2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர். • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...