கெஞ்சும் ஸ்ரீசாந்த், மிஞ்சும் பிசிசிஐ 1

சமீப காலமாக  ஸ்ரீசாந்த் மற்றும் சர்ச்சை என இரண்டும் இணைந்தே ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடை போட்டு வருகின்றன. அதே போல் தான் தற்போது அவர் ஸ்காட்லாந்து நாட்டில் நடக்கும் டி20 லீக்கில் பங்கேற்பு முடிவு செய்திருக்கிறார். அதற்க்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ஆட்ச்சேபனை இல்லை என்று தகுதி சான்றிதழ் வழங்க கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செவி சாய்த்தாக  தெரியவில்லை. இதன் காரணமாக ஸ்ரீசாந்த் தற்போது சான்றிதழ் தர வலியுருத்துமாறு கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியுடன் அந்த டி20 லீக் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கெஞ்சும் ஸ்ரீசாந்த், மிஞ்சும் பிசிசிஐ 2

இதனை பற்றி க்ளென்ரோத்ஸ் கிரிக்கெட் க்ளப்பின் நிர்வாக இயக்குநர் அந்நாட்டு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

குற்றமற்ற ஒருவர் தன்னை குற்றமற்ற என நிரூபித்த பின்னர் கூட அவருக்கான நீதி கிடைக்காமல் இருப்பது அநீதி விளைவிப்பதற்கு சமமாகும். இந்நீதியை பெற்றுத்தர சரியான நீதி அமைப்புகள் இல்லாததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தானாக முன்வந்து அவருக்கான நீதியை தர வேண்டும்.

ஶ்ரீசாந்தை கடந்த 2013 ஆம் வருடம் செப்டம்பர் மாதம்  அனைத்து தொழில்முறை மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

குற்றச்சாட்டு :

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களை டெல்லி கோர்ட் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தாலும் கூட அவர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சிஐ)ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று கிரிக்கெட் வாரியம் கூறியது. 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த மேட்ச் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் உள்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கெஞ்சும் ஸ்ரீசாந்த், மிஞ்சும் பிசிசிஐ 3

இதில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் டெல்லி போலிசால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோருக்கு ஆயுள் காலத் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

கெஞ்சும் ஸ்ரீசாந்த், மிஞ்சும் பிசிசிஐ 4

இந்த நிலையில் 36 பேர் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 36 பேர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கைவிடுவதாகவும் அறிவித்தது.

இதுகுறித்து இந்திய கிரிக் கெட் வாரியம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இருப்பினும் தன் வழி தனி வழி என்ற கொள்கை உடைய இந்திய கிரிக் கெட் வாரியம், கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, வாரிய முடிவு மாறாது என்று தடாலடியாக அறிவித்தது

கெஞ்சும் ஸ்ரீசாந்த், மிஞ்சும் பிசிசிஐ 5

பிசிசிஐ எடுக்கும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை முடிவும், தன்னிச்சையானது. எந்த கிரிமினல் வழக்குகளோடும் தொடர்புடையது அல்ல. வழக்குகளின் தீர்ப்பு இதைக் கட்டுப்படுத்தாது. எனவே தற்போதைய விவகாரத்திலும் பிசிசிஐ முடிவு மாறாது. அப்படியே தொடரும் என்று என பிசிசிஐ பிடிவாதமாக அறிவித்தது.

ஸ்ரீசாந்தின் மேல் மனு :

இந்திய கிரிக்கெட் வாரியதின் இந்த முடிவை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதி மன்றத்தில் முறையிட்டு இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.ஶ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருந்தார் ஶ்ரீசாந்த்.தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதனை எதிர்த்து முறையிட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *