இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம் 1

இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம்

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்த பின்னர் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்குகிறது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள பெரும்பாலான இந்திய வீரர்கள் காயத்தினால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக இந்திய அணிக்கு ஆடிய கேதர் ஜாதவ் காலில் தசை பிடிப்பு காரணமாக அப்போது அணியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் ஒரு போட்டி கூட ஆடவில்லை. தற்போது வரை அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மமீள்வதற்காக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம் 2

அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர். சமீபத்தில் இந்திய அணியில் நுழைந்து அதிரடியாக ஆட துவங்கியவர். நெ.4 இடத்தில் தரூது இவர் தான் ஆடுவார் என தெரிகிறது. ஆனால் இவருக்கும் தசை பிடிப்பு காரணமாகி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இதனால் இவர் மீதும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம் 3
Shreyas Iyer of India with ODI cap during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

அடுத்து யூஜவேந்திர சகால். இந்திய அணிக்கு 2017க் அதிக டி20 விக்கெட்களை வீழ்த்தியவர் இவர். தற்போது இவரது கையில் ஒரு சிறு காயம் ஏற்பட்டுள்ளதால் பந்து வீச முடியாத நிலையில் உள்ளார். உதனால் இவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இதனால் இவரும் எப்படி மீண்டும் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்பார் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் பல வீரர்கள் காயம் 4
Cricket – India v Australia – First One Day International Match – Chennai, India – September 17, 2017 – Yuzvendra Chahal, team’s captain Virat Kohli and Mahendra Singh Dhoni of India celebrate the dismissal of Glenn Maxwell of Australia. REUTERS/Adnan Abidii

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்திய அணியை ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவித்துவிட்டது தேர்வுக்குழு. தற்போது இவர்கள் காயம் அடைந்தால் என்ன செய்வது என யோசித்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *