ஒரு கிரிக்கெட் வீரனுக்கு இதெல்லாம் சகஜமப்பா; கே.எல் ராகுல் சொல்கிறார்

வெற்றி, தோல்வி, ஏற்றம், தாழ்வு என்பது எல்லாம் விளையாட்டில் சகஜமான ஒன்று தான் என்று இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தவான் சொதப்பியதால், அவருக்கு பதிலாக அடுத்த இரண்டு போட்டியிலும் களமிறக்கப்பட்ட கே.எல் ராகுலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாடவில்லை. இதனையடுத்து இவர் மீது விமர்ச்சனங்கள் எழுந்து வருகிறது.

டெஸ்ட் தொடருக்கு பின் நாடு திரும்பியுள்ள கே.எல் ராகுல், உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார்.

Lokesh Rahul of India walks out to bat during the third day of the third Sunfoil Test match between South Africa and India held at the Wanderers Stadium in Johannesburg, South Africa on the 26th January 2018
Photo by: Shaun Roy / BCCI / SPORTZPICS

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் தனது மோசமான பேட்டிங் குறித்து பேசிய ராகுல், விளையாட்டை பொறுத்தவரையில் ஏற்றமும், தாழ்வும் வரத்தான் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ராகுல் “நான் எப்பொழுதும் பாசிடிவ் சைடை மட்டும் பார்ப்பவன். நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நல்லதை விட கெட்ட நாள்தான் அதிக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இதை உங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு புதிய சிந்தனையோடு ஒவ்வொரு நாட்களும் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

நீங்கள் விளையாடும் போடு கற்றுக் கொள்கிறீர்கள். உங்களுடைய விளையாட்டு வாழ்க்கையில் ஏற்றமும் தாழ்வும் ஒரு பகுதி. இது முற்றிலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதை சிறந்ததாக மாற்ற முடியவில்லை. என்னால் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட முடியவில்லை. இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.

தென்ஆப்பிரிக்கா தொடர் முற்றிலும் புதிய சவாலானது. நாங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அதிக அளவில் ஸ்விங் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. வேகம் மற்றும் பவுன்ஸ் உடன் ஸ்விங் என்பது புதிதானது. இந்த தொடரில் நடந்ததை எந்த தொடக்க வீரர்களும் விரும்பமாட்டார்கள். ஆனால், எனக்கு தலைசிறந்த அனுபவம்’’ என்று தெரிவித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...