தென் ஆப்ரிக்காவை காலி செய்த இந்தியா… ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி கேப்டவுன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுமினி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து கோஹ்லி இல்லாமல் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ரெய்னா 43 ரன்களும், தவான் 47 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 172 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு டுமினி 55 ரன்களும், ஜான்கர் 49 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

போட்டி மற்றும் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் தனது சாமர்த்தியமான பந்துவீச்சு மூலம் அந்த ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்ததன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஆட்டநாயகனான சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த மிரட்டல் வெற்றியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதில் சில; • SHARE

  விவரம் காண

  இந்தியாவுடன் மோதும் டி20 தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது அயர்லாந்து அணி.

  இந்தியாவுடன் மோதும் டி20 தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது அயர்லாந்து அணி. இந்த அணி குறித்து அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகி வைட் கூறியதாவது, "இளைஞர்களிடம் அனுபவம்...

  ஆப்கனுக்கு அடுத்த போட்டி ஆஸியுடன்!!!

  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்...

  ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கு ஆட்டொமேட்டிக் தேர்வு – மைக் ஹஸ்ஸி

  2019 நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வாக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மைக்கெல்...

  ஜூலை 11ம் தேதி முதல் துவங்குகிறது டி.என்.பி.எல் !!

  ஜூலை 11ம் தேதி முதல் துவங்குகிறது டி.என்.பி.எல் தமிழ்நாடு பிரிமியர் லீக்  தொடரின் 3வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள்...

  திறமையை வெளிப்படுத்த டி.என்.பி.எல் உதவும்; அபினவ், அப்ரஜித் நம்பிக்கை !!

  திறமையை வெளிப்படுத்த டி.என்.பி.எல் உதவும்; அபினவ், அப்ரஜித் நம்பிக்கை டி.என்.பி.எல். கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அபினவ் முகுந்த்,...