தோனி, கோலி மாதிரி கிடையாது... ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி வேற லெவல்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 1

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் எம்எஸ் தோனி ,விராட் கோலி போன்று கிடையாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் பழையபடி பந்துவீச முடியாததால் கடந்த வருடம் இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்பட்டார்.

தோனி, கோலி மாதிரி கிடையாது... ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி வேற லெவல்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 2

இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பிறகு தானாக முன்வந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த ஹர்தின் பாண்டியா, தனது விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி மீண்டும் பழைய ஹர்திக் பாண்டியாவாக மீண்டு வந்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா, இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தோனி, கோலி மாதிரி கிடையாது... ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி வேற லெவல்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 3

சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்காக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

 

அந்தவகையில் ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் தனித்துவமாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் பாராட்டிப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “தலைமைத்துவம் என்பதற்கு தனியாக ஒரு விதியை நிர்ணயிக்க முடியாது ஏனென்றால் ஒவ்வொருவரும் வித்தியாசமான பண்பும் திறமை படைத்தவர்கள்.ஆனால் அதில் உண்மை என்றால் மற்றவர்களை எப்படி நாம் கையாளுகிறோம் என்பது தான், ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்கிறார், ஆனால் இவருடைய கேப்டன்ஷிப் தனித்துவமானதாக உள்ளது, இவர் விராட் கோலி போன்று, எம்எஸ் தோனி போன்று கேப்டன்ஷிப் செய்யவில்லை.

தோனி, கோலி மாதிரி கிடையாது... ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி வேற லெவல்; பாராட்டும் முன்னாள் வீரர் !! 4

பல ஜாம்பவான்கள் இடம் இருந்து கற்றுக் கொண்டு தனக்கென ஒரு தனி தலைமைத்துவ பண்பை உருவாக்கி ஹர்திக் பாண்டியா அணியை வழி நடத்துகிறார். அவர் நெருக்கடியை சமாளிக்கும் விதம், அவருடைய டெடிகேஷன்,கமிட்மெண்ட் ஆகிய அனைத்தையும் பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது, இதன் காரணமாகத்தான் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது”என்று சபா கரிம் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.