எனது மகன் வாழ்வில் இது முக்கியமான தருணம்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி !! 1
எனது மகன் வாழ்வில் இது முக்கியமான தருணம்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

தனது மகன் அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான மைல்கல் தான் இலங்கைக்கு எதிரான தேர்வு என ஜாம்பவான் சச்ச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். சர்வதேச அளவில் சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை சொந்தக்காரர் . இவரது மகன் அர்ஜூன். இவர் முன்னதாக சிட்னியில் நடந்த விளையாட்டு உணர்வுக்கான சவாலில் அர்ஜூன் 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார்.

தவிர, பவுலிங்கிலும் மிரட்டிய அர்ஜூன் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற டிராவிட் பயிற்சியிலான இந்திய அணி ( 19 வயதுக்கு உட்பட்டோர்) இலங்கை செல்கிறது.

இதற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) அறிவித்தது. இந்த அணியில் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொடருக்காக தரம்சாலாவில் நடந்த பயிற்சி முகாமிலும் அர்ஜூன் பங்கேற்றார்.

அர்ஜூன் தேர்வு குறித்து ஜாம்பவான் சச்சின் கூறுகையில்,‘ இந்திய அணி ( 19 வயதுக்கு உட்பட்டோர்) அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவரின் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். நானும், அஞ்சலியும் எப்போதும் அர்ஜூனுக்கு ஆதரவாக இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்வோம்.’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.