JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது தான்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிகழ்வு தனது வாழ்வில் மறக்கவே முடியாதது என சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்டு மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடிக்கும் ஆறாவது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். சச்சினுக்கு முன்னதாக பிஷன் பேடி, கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகிய ஐந்து வீரர்களும் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துள்ளனர். ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு இடம்பிடித்தார்.

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது தான்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி !! 1

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த பட்டியலில் இடம்பிடிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். அதனால் தான் கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் இடம்பெற தகுதி பெறவில்லை. அவர் ஓய்வு பெற்று ஐந்தாண்டுகள் ஆன உடனேயே சச்சின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துவிட்டார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 1989ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடினார். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கின் பெரும்பாலான சாதனைகளுக்கு சச்சின் டெண்டுல்கர் தான் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது தான்; சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி !! 2

இந்த நிலையில், இந்த விருது வென்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், பல்வேறு சுவராஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சச்சின் பேசியாவது;

நான் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன், அனைத்து விருதுகளும் சிறப்பானது தான் எந்த விருதையும் ஒப்பிட விரும்பவில்லை அனைத்தும் சிறப்பானது தான் என்றார். அதே போல் வாழ்வில் மறக்க முடியாது நிகழ்வு குறித்து கேள்விக்கு பதிலளித்த சச்சின் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது தான் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.  அந்த அழகான கோப்பையை கையில் தாங்கி பிடித்திருந்தது என் வாழ்வில் மறக்கவே முடியாது” என்றார்.

 



  • SHARE
  • விவரம் காண

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

    இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

    அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

    கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

    ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...