இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பிடித்த இந்த 4 பேருக்கு மட்டும் வாழ்த்து தெறிவித்து சச்சின் ! 1

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 

முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பிடித்த இந்த 4 பேருக்கு மட்டும் வாழ்த்து தெறிவித்து சச்சின் ! 2

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். 

இந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி (நாளை) நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பிடித்த இந்த 4 பேருக்கு மட்டும் வாழ்த்து தெறிவித்து சச்சின் ! 3

இந்த 4 டெஸ்ட் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா தொடரை கலக்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் மீண்டும் அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி மீண்டும் அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இங்கிலாந்து டி20 தொடரில் இடம்பிடித்த இந்த 4 பேருக்கு மட்டும் வாழ்த்து தெறிவித்து சச்சின் ! 4

இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகியோர் முதன் முறையாக சர்வதேச அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.  இவர்களை இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் இவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.  இதோ சச்சின் டெண்டுல்கரின் அந்த ட்விட்..,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *