வைரலாகும் வீடியோ ! காயமடைந்த நண்பனுக்கு வாழைப்பழம் உரித்து கொடுத்த சைனி !
சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. வேகமாக வந்த பந்து ஜடேஜாவின் கையில் பட்டதால் காயம் ஏற்பட்டது. காயத்தின் ஏற்பட்ட வலியால் துடித்துப் போன ரவீந்திர ஜடேஜா சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது ஜடேஜா பெயின் கில்லர் ஊசியை போட்டுக் கொண்டார். ஜடேஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்தனர். அந்த ஸ்கேனில் ஜடேஜாவிற்கு எலும்பு விலகல் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
இதன் காரணமாக ஜடேஜா இன்னும் 6 வாரங்களுக்கு விளையாடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும் நேற்று நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்காக தயாராக இருந்தார். அப்போது காயத்திலிருந்து ஜடேஜாவுக்கு நவதீப் சைனி வாழைப்பழம் தோலை உரித்து கொடுத்து உதவினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு ரவீந்திர ஜடேஜாவுக்கு இதற்காக சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
A bit of teamwork, Saini peeling the banana for Jadeja 😅 #AUSvIND pic.twitter.com/O0KYKZT1a9
— 7Cricket (@7Cricket) January 11, 2021