அந்த டைம் தோனியை பாத்திருந்தால் எங்கள் திருமணமே நடந்திருக்காது: மனைவி சாக்சி தூக்கிப் போட்ட புதிய குண்டு 1

ஆரஞ்சு வண்ணம் தீட்டிய நீண்ட முடியுடன் தோனியைப் பார்த்திருந்தால் நான் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன் என அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்ஸ்டா பக்கத்தில் நேற்று கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி நேரலையில் பேசினார். பல்வேறு தகவல்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசிய அவர் தோனியின் ஆரம்பக்கால ஹேர்ஸ்டைல் குறித்தும் பேசினார். அதில், நீண்ட முடி அதில் ஆரஞ்சு வண்ணம் என இருந்த தோனியின் ஹேர்ஸ்டைல் ஒரு பேரிடர் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.அந்த டைம் தோனியை பாத்திருந்தால் எங்கள் திருமணமே நடந்திருக்காது: மனைவி சாக்சி தூக்கிப் போட்ட புதிய குண்டு 2

அது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு நன்றாக இருக்குமென்றும் தோனிக்கு ஒட்ட வெட்டிய ஹேர்ஸ்டைலே அழகாக இருக்குமென்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், அதிர்ஷ்டவசமாக நான் தோனியை நீண்ட முடியுடன் பார்க்கவில்லை. அந்த ஆரஞ்சு வண்ணம் தீட்டிய நீண்ட முடியுடன் தோனியை பார்த்திருந்தால் நான் அவரை கண்டுகொள்ளாமல் சென்றிருப்பேன் தெரிவித்தார். மேலும், ஒட்ட வெட்டிய குறைந்த அளவு முடியுடன் இருக்கும் தோனியை சந்திக்க வைத்த கடவுளுக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் நீண்ட முடியுடனே தோனி காணப்பட்டார். ரசிகர்கள் பலருக்கு பிடித்தமான தோனியின் ஹேர்ஸ்ஸ்டைல் குறித்து அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்பும் கருத்து தெரிவித்து இருந்தார். தோனி தன்னுடைய நீண்ட முடியை வெட்டக்கூடாது என்றும் அவர் அன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.அந்த டைம் தோனியை பாத்திருந்தால் எங்கள் திருமணமே நடந்திருக்காது: மனைவி சாக்சி தூக்கிப் போட்ட புதிய குண்டு 3

இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறும்போது, “தோனி எப்போதும் அனைத்து பொறுப்புகளைத் தானே எடுத்துக்கொள்வார். கேப்டனாக இருக்க வேண்டும் என்ற வெறித்தனமான கனவெல்லாம் அவருக்கு இல்லை.

அந்த டைம் தோனியை பாத்திருந்தால் எங்கள் திருமணமே நடந்திருக்காது: மனைவி சாக்சி தூக்கிப் போட்ட புதிய குண்டு 4

நான் அணியின் 11 பேரில் ஒருவராக இருக்க வேண்டும் என்றே எப்போதும் நினைத்தேன். ஆனால் ஆட்டத்தின் போக்கு குறித்து நாம் கேப்டனுடன் பேசியாக வேண்டும். அந்த வகையில் தோனியிடம் தொடர்ச்சியாகப் பேசினேன். தோனி சொல்வதை எப்போதும் கேட்டுக்கொண்டிருந்தேன். நாங்கள் பல வித்தியாசமான கிரிக்கெட் தந்திரங்களை ஆலோசித்தோம். தோனி தனக்குப் பின்னர் ஒரு சிறந்த கேப்டனாக நான் செயல்படுவேன் என மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரிடம் இருந்து கேப்டன் என்ற பொறுப்பைப் பெறுவதற்கு முன்பு, அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *