ஏம்பா.. கேஎல் ராகுல் மாதிரி பேட்ஸ்மேனை எதவச்சு டீம்ல இருந்து தூக்க சொல்றீங்க - சஞ்சய் மஞ்ரேக்கர் காரசாரமான பேட்டி! 1

கேஎல் ராகுல் மாதிரியான பேட்ஸ்மேன் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு, இந்திய அணியில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கேஎல் ராகுல். ஆசியகோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் என இரண்டுமே அவருக்கு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. அதன் பிறகு நியூசிலாந்து தொடரில் ஓய்வில் இருந்தார்.

கேஎல் ராகுல்

தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் விளையாடி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடி 73 ரன்கள் அடித்தார். அடுத்த இரண்டு போட்டிகளிலும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்சில் 22 மற்றும் 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

ஆகையால் இந்திய அணியில் இவருக்கு எதற்காக தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது?, ஒரு சில போட்டிகள் வெளியில் அனுப்பி உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி நிரூபித்த பின் மீண்டும் அணிக்குள் எடுத்து வர வேண்டும் என்ற பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஏம்பா.. கேஎல் ராகுல் மாதிரி பேட்ஸ்மேனை எதவச்சு டீம்ல இருந்து தூக்க சொல்றீங்க - சஞ்சய் மஞ்ரேக்கர் காரசாரமான பேட்டி! 2

இதற்கிடையில் கேஎல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன் நிச்சயம் அணிக்குள் இருக்க வேண்டும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர். முதல் டெஸ்ட் போட்டியின் போது கமெண்ட்டரிசெய்து கொண்டிருந்த அவர்,

“கே எல் ராகுல் வழக்கமாக ஷார்ட் பந்துகளுக்கு அவுட் ஆகமாட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்துவிட்டார். அவர் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அணி நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவரது பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. சிறு தயக்கம் மட்டுமே தெரிகிறது. அந்த தயக்கத்தை அவர்கள் சரி செய்ய வேண்டும். அவரால் தொடர்ந்து நல்லபடியாக பங்களிப்பை கொடுக்க அது மட்டுமே உதவும். இப்படியே சென்றால், விரைவில் அவரை அணியில் இருந்து தூக்க நேரிடும்.

ஏம்பா.. கேஎல் ராகுல் மாதிரி பேட்ஸ்மேனை எதவச்சு டீம்ல இருந்து தூக்க சொல்றீங்க - சஞ்சய் மஞ்ரேக்கர் காரசாரமான பேட்டி! 3

கேஎல் ராகுல் போன்ற ஒரு பலவீனம் இல்லாத பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாட வேண்டும். அதுவும் துவக்க வீரராக இருப்பது கூடுதல் பலம். போதுமானவரை அவரை அணி நிர்வாகம் நம்புகிறது. உலககோப்பையில் அதை பார்க்க முடிந்தது. இது ஆரோக்கியமானது. மீண்டும் பார்மிற்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *