தன்னை இகழ்ந்த வாயாலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கரை புகழ வைத்த ரவீந்திர ஜடேஜா ! 1

தன்னை இகழ்ந்த வாயாலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கரை புகழ வைத்த  ரவீந்திர ஜடேஜா !

சர்ச்சை வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவ்வப்போது இந்திய வீரர்களின் மீது வன்மத்தை கருதுவது வழக்கம். குறிப்பாக மும்பை வீரர்களை எல்லாம் சப்போர்ட் செய்து விட்டு மற்ற வீரர்களை மட்டம் தட்டி பேசுவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் ஒரு வருடமாக அவரை பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் அந்த குழுவில் சேர்ந்துவிட்டார். உடனடியாக தனது வன்மத்தை கக்கும் வேலையை தொடங்கிவிட்டார்.

கடந்த உலக கோப்பை தொடரின் போது ரவீந்திர ஜடேஜாவை “துண்டு துக்கடா வீரர்” என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜாவை பற்றி மோசமாக பேசியிருந்தார். அவரைப் போன்ற ஒரு வீரரை தனது அணியில் எடுக்கவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

தன்னை இகழ்ந்த வாயாலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கரை புகழ வைத்த ரவீந்திர ஜடேஜா ! 2

இதுகுறித்து அவர் தனது பேட்டியில் நான் பல ஆண்டுகாலம் கற்ற என்னுடைய விதிகளை வைத்து தான் இது போன்ற அணிகளை தேர்வு செய்கிறேன். எனக்கு ரவீந்திர ஜடேஜா உடன் பிரச்சனையில்லை. ஆனால் அவரைப் போன்ற கிரிக்கெட் வீரர்களை பார்த்தால் பிரச்சனை வருகிறது. ஹர்திக் பாண்டியா எனது அணியில் இருக்க மாட்டார். அவர்களுக்கு எல்லாம் ஒரு தனிப்பட்ட மதிப்பு இல்லை என்று கூறியிருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

இந்த மோசமான பேட்டியை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தனர். ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா 90 ரன்கள் அடித்தார். இதனை தொடர்ந்து அப்படியே அந்தர் பல்டி அடித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இருவரையும் வாய் நிறைய புகழ்ந்து பேசியிருக்கிறார்.

தன்னை இகழ்ந்த வாயாலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கரை புகழ வைத்த ரவீந்திர ஜடேஜா ! 3

ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பார்த்த ஒரு சிறந்த ஆட்டம் இதுதான். அதே நேரத்தில் ரவிந்திர ஜடேஜா பந்து வீசும்போது விக்கெட் எடுக்க வேண்டும். அவரது பேட்டிங் கடந்த ஒரு வருடமாக முன்னேற்றம் கண்டு விட்டது. அதிலும் இன்றைய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதற்காக தலை வணங்குகிறேன் என்று பச்சோந்தியை விட அப்படியே அந்தர் பல்டி அடித்து பேசியிருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *