'மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்!' பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய முன்னாள் இந்திய நட்சத்திரம்! 1

மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்! பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய முன்னாள் இந்திய நட்சத்திரம்!

வர்ணனையாளர் குழுவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொள்ளும்படி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு பல ஆண்டுகளாக பி.சி. சி.ஐ. ஒப்பந்த வர்ணனையாளர் குழுவில் இருந்து பணியாற்றி வந்தார்.
தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சையான விமர்சனங்களுக்கு உள்ளானதால், சஞ்சய் மஞ்ச் ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளர் குழுவில் இருந்து அதிரடியாக கடந்த மார்ச் மாதம் நீக்கப்பட்டார்.
'மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்!' பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய முன்னாள் இந்திய நட்சத்திரம்! 2
MANCHESTER, ENGLAND – JULY 10: ICC Commentators Ian Smith(L) and Sanjay Manjrekar and during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)
ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் முதல் வாரம் வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்வதற்க்கு ஐபிஎல் அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரில் வர்ணனை செய்வதற்கு பிசிசிஐ வர்ணனையாளர் குழுவில் நிச்சயம் இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சஞ்சய் மஞ்சுரேக்கர் வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டதால் அவரால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்ய இயலாது.
தற்போது ஐ.பி.எல். போட்டி வர்ணனையாளர் குழுவில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
'மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்!' பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய முன்னாள் இந்திய நட்சத்திரம்! 3
MUMBAI, INDIA – JUNE 19: Former Indian cricketer Sanjay Manjrekar during the Hindustan Times’s MSSA Best School Cricketers 2018 Awards ceremony, at the CCI, Churchgate, on June 19, 2018 in Mumbai, India. (Photo by Anshuman Poyrekar/Hindustan Times via Getty Images)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“நான் முறையாக பல வருடங்கள் பி.சி.சி.ஐ. விதிப்படி நடந்துகொண்டு வருகிறேன். இனிமேலும் ஒருபோதும் விதிகளை மீறி நடக்கமாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். பொருளாதார ரீதியாகவும் உதவியாக இருக்கும். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன். விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி உண்டா? 
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் போட்டிகளை கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி இருக்குமா? என்பதை தெரிவித்துள்ளார் முபாஷ்சிர் உஸ்மானி. இது குறித்து அவர் கூறுகையில்,
'மீண்டும் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்!' பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய முன்னாள் இந்திய நட்சத்திரம்! 4
Fans during the 2nd T20 International match between India and Australia held at the Barsapara Cricket Ground, Guwahati on the 10th October 2017
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
“இந்நாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க  30 முதல் 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்டேடியத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு எங்கள் அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறோம். அரசு அனுமதித்தால் அதே எண்ணிக்கையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்நாட்டு அரசு எடுத்த அதீத நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து கிட்டத்தட்ட தற்போது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டோம். விரைவில் முழுமையாக சரி செய்வோம்.
ஐ.பி.எல். போட்டிக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. அதற்குள் கொரோனா பாதிப்பு இந்நாட்டில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு முன்னதாக நாங்கள் 14 அணிகள் கொண்டு உலக கோப்பை தகுதி சுற்றினை நடத்தினோம். அதேபோல இந்த ஐபிஎல் தொடரையும் எங்களால் வெற்றிகரமாக நடத்த முடியும்” என பேட்டியளித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *