Cricket, Champions Trophy, IPL, IPL 11, Sanjiv Goenka, Rajasthan Royals

ஐ.பி.எல் போட்டியில் 2 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட நிலையில், 2018ம் போட்டியில் விளையாடவுள்ள ராஜஸ்தான் அணியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சஞ்சீவ் கோயன்கா.

மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 வருடம் தடை செய்த நிலையில் 2016 மற்றும் 2017 ஐ.பி.எல் தொடரில் தடை செய்யப்பட்ட இரு அணிகளுக்கு பதிலாக ரைஸிங் பூனே சூப்பர் ஜியாண்ட்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் பங்கேற்றன.

“என் நிறுவனத்தில் வேலை செய்யும் 4000 நபர்களுடன் நெருக்கமாக இருக்கிறேன். அந்த நோக்கத்திற்காக நான் வந்துள்ளேன், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கும் வந்துள்ளேன்,” என சஞ்சீவ் கோயங்கா கூறினார்.

அந்த இரு அணிகளும் 2017உடன் ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படும் என்ற அடிப்படையில் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் காணவிருக்கின்றன. இதனிடையே ரைஸிங் பூனே சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையை பெறும் முனைப்பில் உள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 40% பங்குகளை உடைய மனோஜ் படாலேவை சந்திக்க கோயன்கா லண்டன் விரைந்துள்ளார். அந்த அணியை பெற ஜண்டால் ஸ்டீல் கம்பெனியும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிக பங்கை சுரேஷ் செல்லராம் வைத்து இருக்கிறார், ஆனால், அவர் தற்போது பிசியாக உள்ளதால், அவரது பங்கை முழுவதும் அவரது மகள் அமிஷா ஹதிரமணிக்கு கொடுத்து விட்டார்.

இரண்டு கால இடைநீக்கத்துக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2018-ஆம் ஆண்டு ஐபில்-இல் களமிறங்க உள்ளது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கும் முனைப்பில் கோயங்கா உள்ளார். ஆனால், புதிய பங்குதாரர்களுக்கு எவ்வுளவு பங்கு கொடுப்பார்கள் என தெரியவில்லை.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *