யோ – யோ டெஸ்ட்டில் தோனி; தல தோனியை சந்தித்த சஞ்சு சாம்சன் !! 1

யோ – யோ டெஸ்ட்டில் தோனி; தல தோனியை சந்தித்த சஞ்சு சாம்சன்

துடிப்பான மற்றும் சிறந்த இளம் வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன், இந்திய அணியில் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இந்திய ஏ அணியில் ஆடும் வாய்ப்பையும் யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் இழந்த சஞ்சு சாம்சன், பெங்களூருவில் தோனியை சந்தித்துள்ளார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக ஆடும் சஞ்சு சாம்சன், சிறப்பான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது நல்ல விக்கெட் கீப்பரும் கூட. இந்த சீசனில் அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றதற்கு சஞ்சு சாம்சனின் பேட்டிங்கும் ஒரு காரணம்.

யோ – யோ டெஸ்ட்டில் தோனி; தல தோனியை சந்தித்த சஞ்சு சாம்சன் !! 2

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேஸ்மேனான தோனி, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார். அதன்பிறகு இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் தேவை. தோனியின் இடத்தை சஞ்சு சாம்சன் பிடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் அவரோ அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

யோ – யோ டெஸ்ட்டில் தோனி; தல தோனியை சந்தித்த சஞ்சு சாம்சன் !! 3

யோ யோ டெஸ்ட்டில் இளம் வீரர்களே தேர்ச்சி பெறமுடியாமல் தவித்துவரும் நிலையில், 37 வயதான தோனி இளம் வீரர்களை விட அதிக உடற்தகுதியுடன் திகழ்கிறார். ஓடுவதிலும் இளம் வீரர்களுக்கு சவால் விடுக்கிறார் தோனி. அந்தளவிற்கு உடற்தகுதியுடன் உள்ளார்.

இந்நிலையில், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்த சஞ்சு சாம்சன், பெங்களூருவில் தோனியை சந்தித்துள்ளார். தோனியை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

தோனியிடம் உடற்தகுதி தொடர்பான ஆலோசனைகளை சஞ்சு சாம்சன் பெற்றிருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதில் தோனிக்கு நிகர் தோனி தான். இதை பல தருணங்களில் அவரது செயல்பாடுகளின் மூலமாகவும் இளம் வீரர்கள் கூறுவதன் மூலமாகவும் அறியலாம். அதிலும் விக்கெட் கீப்பர்களுக்கு கீப்பிங் நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதில் தோனிக்கு அளாதி ஆர்வம். அந்த வகையில், சஞ்சு சாம்சனுக்கும் சில நுணுக்கங்களை கண்டிப்பாக தோனி கற்று கொடுத்திருப்பார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *