நாங்க தோத்தாலும் இவரு ஜெயிச்சுட்டாரு ! சோகத்தில் பேசிய சஞ்சு சாம்சன் ! 1

நாங்க தோத்தாலும் இவரு ஜெயிச்சுட்டாரு ! சோகத்தில் பேசிய சஞ்சு சாம்சன் !

14வது ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் விரைவிலயே விக்கெட்களை இழந்தனர். இதில் டூபிளெசிஸ் அடித்த 33 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.

நாங்க தோத்தாலும் இவரு ஜெயிச்சுட்டாரு ! சோகத்தில் பேசிய சஞ்சு சாம்சன் ! 2

இதையடுத்து மொயின் அலி 26 ரன்கள், ராயுடு 27 ரன்கள் , தோனி 18 ரன்கள் குவித்துள்ளார்கள். இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் மொத்தம் 11 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார்கள். இதில் சேதன் சாகரியா 3 விக்கெட்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்கள். தற்போது 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.

ஆனால் பட்லரை தவிர அனைத்து பேட்ஸ்மங்களும் தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோஸ் பட்லர் அடித்த 49 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது.

நாங்க தோத்தாலும் இவரு ஜெயிச்சுட்டாரு ! சோகத்தில் பேசிய சஞ்சு சாம்சன் ! 3

சிஎஸ்கே பவுலர்கள் மொயின் அலி 3 விக்கெட்கள், ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர். இதுபோக ஜடேஜா 4 கேட்ஸ்களை பிடித்து அசத்தினார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கேவின் இந்த இரண்டாவது வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ராஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தோல்விக்கான காரணத்தை கூறியிருக்கிறார். அவர் பேசுகையில் “சேஸிங்கு இது ஒரு நல்ல ஸ்கோர் என்று தான் நினைக்கிறேன். ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்களை இழந்துவிட்டோம்.

நாங்க தோத்தாலும் இவரு ஜெயிச்சுட்டாரு ! சோகத்தில் பேசிய சஞ்சு சாம்சன் ! 4

எங்களது பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் சிஎஸ்கே பேட்ஸ்மன்கள் அடித்து ஆட தொடங்கினர். நாங்கள் எங்களது கணிப்பை விட 10-15 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். நாங்கள் இன்றைய போட்டியில் பனி இருக்காது என்று எண்ணவில்லை. இதனால் பந்துகள் நன்றாக திரும்பியது. இந்த போட்டியில் சேதன் சக்காரியா நன்றாக பந்துவீசினார். நாங்கள் தோத்தாலும் எங்களிடம் நிறைய முன்னேற்றம் இருந்து” என்று பேசியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *